அரசுப்பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-01-08 05:11 GMT
தஞ்சாவூர் ஆட்சியர் தீபக் ஜேக்கப்

அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.  இது குறித்து தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஒன்றிய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற பெற்றோரின் உச்சகட்ட ஆண்டு வருமானம் ரூ. இரண்டரை லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.இதில் பயன்பெற அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் மாணவிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது அஞ்சல் வங்கிகளில் தமது பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி அதனை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஆதார் எண் மற்றும் வங்கி விபரங்களை வருமான சான்று மற்றும் ஜாதிச் சான்று நகல்களுடன் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமைஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவிகளது விபரங்களை இஎம்ஐஎஸ் என்ற ( Eduational Management Information System) இணை யதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News