கிருஷ்ணகிரி அருகே 30 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி ஆண்டு விழா
கிருஷ்ணகிரி அருகே வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு நடைப்பெற்ற பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி ஆண்டு விழா வெகு விமர்ச்சியாக நடைப்பெற்றது. பள்ளி விளாகத்தில் துவங்கிய இந்த விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
மேலும் இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவருமான சேகர் இப்பள்ளியில் மிக்கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 100 சதவிதம் தேர்ச்சிப் பெற உறுதுணையாக இருக்கும் இருபால் ஆசிரியர்களைப் பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கிபள்ளி விளாகத்தில் தென்னை மரக்கன்றுகளை நடவு செய்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது தனியார் பள்ளிகளில் தான் பள்ளி ஆண்டு விழாக்கள் நடப்பது உண்டு.
ஆனால் அரசுப்பள்ளிகளில் ஆண்டு விழா என்பது குறைவுதான், தற்போது அரசுப் பள்ளிகளிலும் படிக்கின்ற மாணவ மாணவிகள், மத்தியிலும் உற்சாகத்தினை ஏற்படுத்தும் வகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் பள்ளியில் ஆண்டு விழா இன்னிசைக் கச்சேரிகளுடன் துவக்கப்பட்டுள்ளது.
மணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த விழாவில் மாணவர்களின் ஆர்வம் படிப்பிலும் இருக்க வேண்டும், தான் பயிற்ற கல்வியை யாரும் திருடிவிட முடியாது என்பதை உணர்ந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் மிக உயர்ந்த பண்பாளர்களாக உருவாகிட முன்வர வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடந்து பள்ளி மாணவ, மாணவிகளின் வண்ணமிகு கலைநிகச்சிகளும் வெகு விமர்ச்சியாக நடைப்பெற்றது, இதில் மாணவ மாணவிகள். ஆர்வத்துடன் கலந்துக் கொண்டு கிராமியப் பாடல்களுக்கு தக்கவாறு நடனமாடிய அனைவரது பாராட்டையும்பெற்றனர்.
மேலும் இந்த விழாவிற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மூத்த வழக்கறிஞர் அசோகன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் திம்மி,ஊராட்சி மன்ற தலைவர் ஜெசிந்தா வில்லியம்,ஊராட்சி மன்ற துணை தலைவர் மாரம்மாள் சின்னசாமி, முன்னாள் பெற்றோர் சங்கத் தலைவர்கள் .பாலகிருஷ்ணன், கண்ணன் மற்றும்பள்ளிபள்ளி ஆசிரியர்களுக்கான திருமதி அமலா ஆரோக்கியமேரி, சகாய ஆரோக்கியராஜ், சதீஷ் உள்ளிட்ட ஆசிரியர்களும் கிராம மக்களும் கலந்துக் கொண்டனர்.