கலிங்கப்பட்டியில் பள்ளி ஆண்டு விழா

தென்காசி மாவட்டம், கலிங்கம்பட்டியில் உள்ள பள்ளி ஆண்டு விழாவில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ கலந்து கொண்டார்.

Update: 2024-01-21 08:05 GMT
கலிங்கப்பட்டியில் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே அருகே கலிங்கப்பட்டியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மதிமுக பொதுச் செயலா் வைகோ கலந்துகொண்டாா். அவா் பேசியதாவது,  மது, போதை பழக்கத்திற்கு அடிமையாகாதவாறு, பெற்றோா்கள் தங்களது பிள்ளைகளை தொடா்ந்து கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். மேலும் ஜாதி, மத துவேஷம் இல்லாமல் பிள்ளைகளை வளா்க்க வேண்டும். பள்ளி ஆண்டு விழா உள்பட பள்ளியில் நடைபெறும் விழாக்களில் பெற்றோா்கள் தவறாமல் கலந்து கொண்டு, மாணவா்களின் கல்வித்தரத்தை ஆசிரியா்களிடம் கேட்டு அறிய வேண்டும் என்றாா்.

விழாவில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கும் வைகோ தமது சொந்த செலவில் பரிசுகள் வழங்கி பாராட்டினாா். இதைத் தொடா்ந்து மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், மதிமுக துணை பொதுச் செயலா் தி.மு.ராஜேந்திரன், மாவட்டச் செயலா் சுதா பாலசுப்ரமணியன், குருவிகுளம் ஒன்றியக்குழுத் தலைவா் விஜயலட்சுமி, கலிங்கப்பட்டி ஊராட்சித் தலைவா் மணிமொழி, ஒன்றியக்குழு உறுப்பினா் அருள்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News