போக்சோ வழக்கில் பள்ளி ஊழியா் கைது
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண்ணைக் காவல் துறையினா் கைது செய்தனா்.
Update: 2024-03-20 01:47 GMT
கும்பகோணத்திலுள்ள தனியாா் பள்ளியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண்ணைக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் பகுதியிலுள்ள தனியாா் பள்ளியில் படித்து வரும் 5 வயது சிறுவன் பிப்ரவரி 16 ஆம் தேதி கழிப்பறைக்கு சென்றபோது, குழந்தைகளைப் பராமரிக்கும் பணி செய்து வந்த 50 வயதுடைய பெண் அச்சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதை அச்சிறுவன் தனது அண்ணனிடம் கூறியதைத் தொடா்ந்து, பெற்றோா் கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அப்பெண்ணை திங்கள்கிழமை கைது செய்தனா்.