செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை

அம்மாபேட்டை அருகே செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் 9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2024-04-29 06:50 GMT

பைல் படம் 

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே  கீழக்கோவில்பத்து கிராமம், அம்பலக்கார தெருவை சேர்ந்தவர் வனரோஜா. இவரது மகள் சரண்யா(வயது 14). இவர் அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். வனரோஜாவின் கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். சரண்யா அடிக்கடி செல்போன் பார்த்து வந்துள்ளார். இதை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த சரண்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சரண்யாவின் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வனரோஜா கொடுத்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடிக்கடி செல் போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் மனவேதனை அடைந்த மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News