பள்ளி மாணவி தற்கொலை
சத்திப்பட்டு அண்ணா நகரை சேர்ந்தவர் பழனிவேல் மகள் பள்ளிக்கு செல்லாததால் திட்டியநிலையில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Update: 2024-03-16 03:31 GMT
விழுப்புரம் அருகே உள்ள சத்திப்பட்டு அண்ணா நகரை சேர்ந்தவர் பழனிவேல் மகள் வேல்விழி (13). இவள், வளவனூரில் உள்ள தனது பாட்டி மாலதி வீட்டில் தங்கியிருந்து வளவனூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவள் கடந்த 5 நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை என்பதால் அவளை பாட்டி திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவி வேல்விழி, தூக்குப்போட்டு கொண்டார். உடனே அவளை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.