பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் !

கோவில்பட்டியில் பள்ளிகல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.

Update: 2024-07-17 08:19 GMT

விழிப்புணர்வு பிரச்சாரம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழகம் முழுவதும்  கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு அமைத்து அதன்மூலம் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தமிழகஅரசு செய்து வருகிறது. இதில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 20 நபர்கள் கொண்ட பள்ளி மேலாண்மை குழுவின் பதவிக்காலம் 3 வருடங்கள் முடிவுற்றது.  தற்போது தமிழக அரசு பள்ளி மேலாண்மை குழுவினை ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்குள் மறு கட்டமைப்பு செய்திட உத்தரவிட்டுள்ளது.

இதில் பள்ளி மேலாண்மை குழுவிற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் போது அதில் 2 உள்ளாட்சி பிரதிநிதிகள், 4 முன்னாள் மாணவர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர், கல்வியாளர், மாற்றுதிறனாளி குழந்தைகளின் பெற்றோர், குழந்தைகளின் பெற்றோர்.என 24 உறுப்பினர்களை தேர்வு செய்திட  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பெற்றோர்களை அதிகளவில் பங்கேற்பு செய்திட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவில்பட்டியில்  நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி வன்னியப்பன்.கோவில்பட்டி ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன்.ஜேசிஐ தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரச்சுரங்களை வழங்கினர்.

Tags:    

Similar News