பள்ளி மாணவன் தற்கொலை - காவல்துறையினர் தீவிர விசாரணை
வந்தவாசி அருகே பள்ளி மாணவன் தூக்கில் தற் கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மேல்பாதிரி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்(48), வெண்குன்றம் கிராமத் தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திலக்(19), ஜோதீஸ்வரன் (16) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். திலக் சென்னையில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். ஜோதீஸ்வரன் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் வந்தவாசி அரசு மருத்துவனையில் கடந்த வாரம் சங்கர் அனுமதித்துள்ளார்.
அப்போது சிகிச்சை அளித்த நிலையில் குணமாகாமல் இருந்தாக கூறப்படுகிறது. தொடர்ந்து, மருத்துவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்து பரிந்துரை செய்துள்ளனர். சங்கர் சென்னையில் அண்ணன் திலக் உள்ளதால் தாத்தா வீட்டில் தங்கி சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிக்சை பெற்றுக்கொள்ளலாம் என கூறியதாக தெரிகிறது. இதனிடையே மலம் செல்லும் பகுதியில் ரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சங்கர் நேற்று காலை மருத்துவமனைக்கு செல்லாம் என கூறி நேற்று முன்தினம் ஜோதீஸ்வரனிடம் தாமாகவே கூறியுள்ளார்.
அதனை அடுத்து, வீட் டில் இருந்துக் கொள் எனக் கூறி பெட்ரோல் பங்க் இரவு பணிக்கு சென்றுள்ளார். பணி முடிந்த சங்கர் நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு திறந்த நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அறையில் தூக்கில் ஜோதீஸ்வரன் தூகீல் தொங்கிய நிலையில் சடலமாக இருந்தார். அப்போது, சங்கரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தொங்கிய சடலத்தை மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வந்தவாசி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் கோவிந்தராஜிலு மற்றும் போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக் காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப் பிவைத்தனர். மேலும், சங் கர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளிமாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல, தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் உடனடியாக 104 என்ற இலவச எண்ணிற்கு அழையுங்கள்