களப்பயணம் சென்ற பேட்டை பள்ளி மாணவர்கள்
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் கலை அறிவியல் கல்லூரிக்கு அரசுப்பள்ளி மாணவர்கள் களப்பயணம் சென்றனர்.;
Update: 2024-02-24 06:59 GMT
களப் பயணம்
தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு கல்லூரி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கல்லூரி களப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு பள்ளி மாணவர்கள் கல்லூரிகளை கண்டு களித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று (பிப்.24)பேட்டை காமராஜர் நகர் மன்றம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 35 பேர் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரிக்கு களப்பயணம் சென்றனர்.