வாகன விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவன் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம், இடலாக்குடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மாணவன் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-04-13 03:27 GMT
மாணவன் பலி

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் இடலாக்குடி பள்ளி தெருவை சேர்ந்த அபூபக்கர் சித்திக் என்பவர் மகன் அயான் (14). நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 7-ம் தேதி வீட்டில் இருந்து பள்ளிவாசலுக்கு நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பிறகு ரஹ்மத் கார்டன் திருப்பு பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் இருவரும் சாலையில் விழுந்தனர். இதில் அயானுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

Advertisement

அக்கம்பத்துனர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அயான் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News