லாரி மோதி பள்ளி மாணவன் பலி : தாய் கண் முன்னே பரிதாபம்!
தூத்துக்குடியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தாய் கண்முன்னே பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
. தூத்துக்குடி கீழ சண்முகபுரத்தை சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இந்த தம்பதியின் மகன் சுனில் காளிதாஸ் (14), தாமோதர நகரில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். இன்று மதியம் புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவரது தாய் தமிழ்செல்வியின் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.
4ஆம் ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஒரு லாரி பைக் மீது மோதியதில் மாணவன் சுனில் காளிதாஸ் கீழே விழுந்ததில் லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் குறித்து வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தாய் கண் முன்னே மகன் விபத்தில் இறந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.