பேருந்து மோதி பள்ளி மாணவன் உயிரிழப்பு!
திருப்பத்தூரில் தனியார் பேருந்து மோதி, 9ம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்தார்.;
திருப்பத்தூரில் தனியார் பேருந்து மோதி, 9ம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே தனியார் பள்ளி பேருந்து மோதி ஒன்பதாம் வகுப்பு மாணவன் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பாரதிதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் மகன் திவாகர் வயது 14 தோமினிக் சாவியோ பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார் இவர் இன்று தனது இருசக்கர வாகனத்தில் காய்கறி வாங்க சக்தி நகர் பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு செல்ல தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த ரவி மகன் அஜய் என்பவர் உடன் புதுப்பேட்டை ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் உள்ள வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளியின் தனியார் பேருந்து திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பயிலும் மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு புதுப்பேட்டை ரோடு வழியாக சென்றது அப்போது நேர் எதிரே வந்த திவாகர் மற்றும் அஜய் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் திவாகர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் அஜய் உயிர் தப்பினர் இந்த நிலையில் பேருந்து ஓட்டுனர் பள்ளி பேருந்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி உள்ளார்.
பின்னர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வேறு ஒரு பேருந்து வரவைத்து பள்ளி மாணவர்கள் அங்கிருந்து பள்ளிக்குச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசருக்கு தகவல் தெரிவித்தினா பெயரில் விரைந்து வந்த போலீசார் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவைத்து உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் திவாகர் உயிரிழந்த சம்பவத்தால் பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் காண்போர் நெஞ்சை கண்கலங்க செய்தது காய்கறி வாங்க சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவனை தனியார் பள்ளி பேருந்து மோதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.