பள்ளி மாணவர் மாயம் - போலீஸ் விசாரணை
பள்ளி மாணவர் காணவில்லை - போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-07-09 05:19 GMT
காணவில்லை
சங்கராபுரம் அடுத்த பொய்குனம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் தர்னீஸ், 14; சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 5ம் தேதி பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர் தனது மொபைல் போனை தர்னீசிடம் கொடுத்திருந் தார். சிறிது நேரம் கழித்து மொபைல் போனை கேட்டபோது மொபைல் போன் தொலைந்து போனதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து சுப்ரமணி கூறியதால், ஜெய்சங்கர் தனது மகனிடம் மொபைல் போனை தொலைத்ததால் கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தர்னீஸ் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஜெய்சங்கர் அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.