சாதனை படைத்த மாணவ மாணவியருக்கு பாராட்டு

பள்ளிப்பாளையத்தில் பொதுத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Update: 2024-05-18 15:38 GMT

மாணவர்களுக்கு பாராட்டு

பள்ளிபாளையம் ஈரோடு சாலையில் உள்ள நந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 556/600 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தை A.அகிலாண்டேஸ்வரி என்ற மாணவியும், 555 மதிப்பெண்களைப் பெற்று இரண்டாமிடத்தை சி.கரிஷ்மா கன்வர் என்ற மாணவியும், ,547 மதிப்பெண்களைப் பெற்று மூன்றாம் இடத்தை ஏ.ஆயிஷா என்ற மாணவியும் பெற்றுள்ளார்.

மேலும் தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்கள் இரண்டு மாணவிகளும், 97 மதிப்பெண்களை 3 மாணவ மாணவிகளும் , சமஸ்கிருதப் பாடத்தில் 98 முதல் மதிப்பெண்ணாகவும், 97 மதிப்பெண்களை மூன்று மாணவிகளும், கணினி அறிவியலில் 98 மதிப்பெண்கள் இரண்டு மாணவிகளும் ,பொருளாதாரப் பாடத்தில் 98 மதிப்பெண்களும் பெற்று 100% தேர்ச்சி பெற்றுள்ளார்கள். பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வில் 551/600 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தை எஸ்.ஆதித்ய திவாரி என்ற மாணவரும், 527 மதிப்பெண்களைப் பெற்று இரண்டாமிடத்தை D.ஆஸ்தா என்ற மாணவியும் ,519 மதிப்பெண்களைப் பெற்று மூன்றாம் இடத்தை .ஜே. முகமது தௌபிக் என்ற மாணவரும் பெற்றுள்ளார்.

மேலும் சமஸ்கிருதம் பாடத்தில் 99/100 மதிப்பெண்களும், கணினி அறியியல் மற்றும் கணினி பயன்பாடு பாடங்களில் தல 97 , மதிப்பெண்களும், வேதியியலில் 94 மதிப்பெண்களும், இயற்பியலில் 92 மதிப்பெண்களும், உயிரியலில் 90 மதிப்பெண்களுடன் 100% தேர்ச்சியும் பெற்றுசாதனை படைத்துள்ளனர் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 500 க்கு 490 மதிப்பெண்கள் பெற்று N. நித்திஷ் குமார் என்ற மாணவன் முதலிடத்தையும், 488 மதிப்பெண்களைப் பெற்று இரண்டாமிடத்தை S.B. நிதர்ஷன் என்ற மாணவரும் ,484 மதிப்பெண்களைப் பெற்று மூன்றாம் இடத்தை R.S. சஞ்சீவ் வர்சன் என்ற மாணவரும் பெற்றுள்ளார்.

கணிதப் படத்தில் 100/100 ஐந்து மாணவர்களும், 99 மதிப்பெண்கள் மூன்று மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 100/100 ஒருமாணவரும், 99 மதிப்பெண்கள் 2 மாணவர்களும், சமூக அறிவியல் பாடத்தில் 99 மூன்று மாணவர்களும் , ஆங்கிலத்தில் 99 இரண்டு மாணவர்களும் ,தமிழ் பாடத்தில் 98 மதிப்பெண்கள் இரண்டு மாணவர்களும், பெற்றதோடு 100% தேர்ச்சியும் பெற்றுசாதனை படைத்துள்ளனர். தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவ, மாணவர்களையும் பள்ளியின் தாளாளர் டாக்டர் சி.என்.ராஜா மற்றும் பள்ளியின் செயலாளர் . நந்தி. சி. மோகன் அவர்களும் பாராட்டியதோடு ரொக்கப்பரிசும் வழங்கி பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர். இந்நிகழ்வில் பள்ளியின் முதல்வர் என்.சண்முகசுந்தரி மற்றும் பள்ளியின் துணை முதல்வர் I.ராஜேஷ் அவர்களும் உடனிருந்து பாராட்டுகளை தெரிவித்தனர்.

Tags:    

Similar News