பூந்தமல்லி அருகே விஜயகாந்துக்கு பள்ளி மாணவர்கள் அஞ்சலி
Update: 2024-01-05 11:16 GMT
நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28ம் தேதி காலமானார். சாமானியர்கள் தொடங்கி முதல்வர் வரை பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள், விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர் விஜயகாந்த் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கு பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் லயன் ஆர். சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் பூவை சதீஷ், சஞ்சீவி, ஆயில் சரவணன், தியாகராஜன், கண்ணன், மாரிமுத்து, மனோஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் டி. கிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கேப்டன் விஜயகாந்த்துக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கிருந்தவர்கள், மாணவர்கள் மத்தியில் கேப்டனை போல பிறருக்கு நம்மால் இயன்றதை செய்வோம், மனிதாபிமானத்துடன் உதவி செய்வோம் என்றும் உறுதி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பூவை ஒன்றிய துணை செயலாளர் பிரபாகரன், சென்னீர்குப்பம் ஊராட்சி செயலாளர் மோகன், நிர்வாகிகள் சூர்யா, தயாளன், பிரபாகரன், கார்த்திக், அபிமன்யு, திவாகர், மகளிர் அணி நிர்வாகிகள் சுப்புலட்சுமி, பவித்ரா, கோமதி மற்றும் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.