பள்ளி மாணவர்கள் சாலை வசதி கேட்டு ஆட்சியரகத்தில் மனு !
பெரம்பலூர் மாவட்டம், அரசடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பெற்றோருடன் வந்து சாலை வசதி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-06-15 05:19 GMT
பெரம்பலூர் மாவட்டம், அரசடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பெற்றோருடன் வந்து சாலை வசதி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடிபேரூராட்சிக்கு உட்பட்ட அரசடிக்காடு கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோருடன் மாவட்ட ஆட்சி அலுவலகம் வந்த அவர்கள் தெரிவிக்கும் போது தங்களுக்கு சரியான சாலை வசதி இல்லாததால், தனியாருக்கு சொந்தமான விவசாய பட்டா நிலத்தில், சென்று வந்ததாகவும், தற்பொழுது அந்த நிலத்தின் உரிமையாளர்களில் சிலர் திடீரென தங்களது பட்டா நிலத்தில் பாதைவிட முடியாது என்று கூறி அதனை மறித்து விட்டதாகவும் தெரிவித்தவர்கள். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அந்த வழியாக வந்து சென்ற பள்ளி பேருந்துகள், பால் ஏற்றி செல்லும் வாகனங்கள் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளதால், தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் பள்ளிக்கு செல்வது சிரமம் ஏற்பட்டு வருவதாகவும் கூறி, ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் மனு கொடுத்ததாகவும், மனுவை பெற்று அதிகாரிகள் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளதாக தெரிவித்தனர்.