பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் - ஆட்சியர் அறிவிப்பு
Update: 2023-11-07 01:40 GMT
பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்
பருவமழையின் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை நீர் கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் மழையின் அளவு குறைவாகவே காணப்படுவதால், பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று (07.11.2023) வழக்கம்போல் இயங்கும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்