கெங்கவல்லியில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: கணவன் மீது வழக்கு
கெங்கவல்லியில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சி 12வது வார்டு பனங்காடு பகுதி யைச் சேர்ந்தவர் குமார் (30). இவரது மனைவிஜீவிதா(25). இவர்களுக்கு கடந்த 8ஆண் டுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த காணும் பொங்கல் அன்று, கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த குமார், ஜீவிதாவை அரிவாளால் கையில் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த ஜீவி தாவை, அவரது தந்தைபெரியசாமி மீட்டு, கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அப்போது பணியில் இருந்த செவிலியர்,ஜீவிதாவுக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 3நாட்களாக வெட்டுப்பட்ட ஜீவிதா வுக்கு, தையல் போடாமல் இருந்துள்ளனர். இது குறித்து சிலர், பாதிக்கப்பட்ட ஜீவி தாவிடம் விசாரித்தனர். இதை பார்த்த செவிலியர்கள், ஜீவிதாவிற்கு தையல் போட்டனர்.
இதுகுறித்து ஜீவிதா அளித்த புகாரின் பேரில், குமார் மீது வழக்குப் பதிவு செய்து, கெங்கவல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.