அதிமுக, திமுக நிர்வாகிகளுக்கு அரிவாள் வெட்டு

மரக்காணத்தில் அதிமுக நிர்வாகி மற்றும் அவரது மகனை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியது. இதை தடுக்க சென்ற திமுக கவுன்சிலரையும் அந்த கும்பல் வெட்டி விட்டு தப்பியோடியது.;

Update: 2024-01-23 07:57 GMT

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சால்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் பழனி 50 இவர் அதிமுகவில் விழுப்புரம் மாவட்ட மீனவரணி செயலாளராக உள்ளார், இவரது மகன் நவநீதம் வயது 30 இவர்கள் இருவரும் மரக்காணத்தில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகின்றனர், இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் பழனி மற்றும் நவநீதத்தை கத்தியால் தாறுமாறாக வெட்டியுள்ளனர்,

Advertisement

அப்போது அதை பார்த்த மரக்காணம் பேரூராட்சி ஆறாவது வார்டு திமுக கவுன்சிலர் அவர்களை தடுக்க முயன்ற போது அவரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர், உடனடியாக அருகில் இருந்தவர்கள் மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மரக்காணம் போலீசார் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மரக்காணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து பின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி கனக செட்டிகுளம் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து கொலை முயற்சிக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News