பேட்டையில் எஸ்டிபிஐ கட்சியின் முப்பெரும் விழா
By : King 24X7 News (B)
Update: 2023-10-25 15:41 GMT
எஸ்டிபிஐ கட்சியின் முப்பெரும் விழா
நெல்லை மாநகர பேட்டையில் எஸ்டிபிஐ கட்சியின் முப்பெரும் விழா இன்று மாலை 6 மணியளவில் பேட்டை வசந்தம் திருமண மஹாலில் நடைபெற்றது. இதற்கு 20வது வார்டு தலைவர் ஜெய்லானி தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்கு விருது வழங்கி உரையாற்றினார். இதில் நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.