சென்னை கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம்.
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.;
Update: 2024-05-27 01:50 GMT
கடல் சீற்றம்
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. எப்போதும் இல்லாத காட்சியாக கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி எழும்பி தொடர்ந்து வேகமாக கரையைத் தாக்கி மேல் எழும்பியது. சற்றும் தாமதம் இன்றி அடுத்தடுத்து தொடர் அலைகள் வேகமாக உயரமாக எழும்பி நுரையுடனும் மணலை அள்ளித் தெளித்தது. வங்கக் கடல் பகுதியில் தீவிரப்புயல் உருவாகி இருக்கக்கூடிய நிலையில் அது நேற்று இரவு தீவிரப்புயலாக சூறாவளி காற்றுடன் கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ள நிலையில், சென்னை பட்டினமாக்கம் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் கடும் சீற்றத்துடன் இருக்கும் நிலையில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குழந்தைகளுடன் கடற்கரையில் புகைப்படங்கள் எடுத்து விளையாடி ரசித்தனர்.