முதல்வர் புதுகை வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

முதல்வர் வருகையை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் இரண்டு நாட்களுக்கு முன்பு திருமண விழா மற்றும் வரவேற்பு நடக்கும் பகுதிகளை பார்வையிட்ட ஆய்வு செய்தார்.

Update: 2024-07-06 09:19 GMT

 ஸ்டாலின்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி அருகே உள்ள பொன் பொதுப்பட்டியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இல்ல திருமண விழா நாளை 7ஆம் தேதி நடக்கிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி அன்று மாலை புதுக்கோட்டை சிவபுரம் ஜேஜே கலை அறிவியல் கல்லூரியில் நடக்கிறது இதில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வந்து அங்கிருந்து காரில் புதுக்கோட்டை வருகிறார்.

முதல்வர் வருகையை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் இரண்டு நாட்களுக்கு முன்பு திருமண விழா மற்றும் வரவேற்பு நடக்கும் பகுதிகளை பார்வையிட்ட ஆய்வு செய்தார். பாதுகாப்பு பணிகள் தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவருடன் திருச்சி சரக டிஐஜி மனோகர் புதுகை எஸ்பி வந்திதா பாண்டே உடன் இருந்தனர். முதல்வர் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Tags:    

Similar News