மண்டைக்காட்டு அம்மனுக்கு சீர் பொருள்கள் பவனி 

மண்டைக்காட்டு அம்மனுக்கு சீர் பொருள்கள் பவனி நடைபெற்றது.

Update: 2024-03-05 10:49 GMT
மண்டைக்காடு கோவிலுக்கு சீர் கொண்டு சென்ற பக்தர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் இந்த வருட மாசித்திருவிழா  நேற்று முன்தினம் திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சியுடன் விழா நடந்து வருகிறது.        

நேற்று இரண்டாம் நாள் விழாவை முன்னிட்டு காலை நடை திறப்பு, கணபதி ஹோமம், உச்சபூஜை ஆகியவை நடந்தது.  நண்பகல் 12 மணிக்கு முப்பந்தல் ஆல மூடு இசக்கியம்மன் பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் மண்டைக்காடு கோயிலுக்கு சீர் கொண்டு வரப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.        

மண்டைக்காடு பால்குளம் கண்டன் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலில் இந்து புறப்பட்ட சீர் கொண்டு செல்லும் நிகழ்ச்சியை சேவா சங்க நிர்வாகி டாக்டர் அருணாச்சலம் தொடங்கி வைத்தார். தலைவர் சத்தியசீலன், கல்லுக்கூட்டம் பேரூராட்சி கவுன்சிலர் முருகன் உட்பட நிர்வாகிகள், பெண்கள் சீர் கொண்டு சென்றனர்.    

 தொடர்ந்து மதியம் உச்ச பூஜை, அன்னதானம், மாலையில் அம்மன்  தங்கத்தேர் பவனி, சாய்ரட்ச்சை பூஜை, இரவு அத்தாழபூஜை போன்றவை நடந்தது.       இன்று மூன்றாம் நாள் காலை மற்றும் இரவு 9:30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி நடக்கிறது.

Tags:    

Similar News