செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை: விவசாயிகள் கோரிக்கை
செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எரி சாராயம் தயாரிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கடந்த 2009இல் மத்திய அரசின் பார்கவா கமிட்டி பரிந்துரைப்படி கரும்பின் உவப்பொருட்கள் விலை முலாசஸ் பிரஸ்மட் மதிப்பு கூட்டிய லாப விலை ஆகியவற்றை சர்க்கரை விலையுடன் இணைத்து கரும்பு விலை வழங்க வேண்டி அறிவித்தது.
இவ்வகையில் 2006-2007 இல் எத்தனால் எனப்படும் தயாரிக்க டண்ணுக்கு 100 ரூபாய் என பிடித்தம் செய்த ஐந்து கோடி ரூபாயில் மத்திய அரசு மானியத்துடன் எரி சாராயம் தயாரிக்கும் பணி துவங்கவில்லை இதே காலகட்டத்தில் துவங்கிய சேலம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஆர் எஸ் தயாரித்து 46 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்து ஏலம் விட்டு லாபம் ஈட்டுகிறது.
இதே போல் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் துவங்கி எரி சாராயம் தயாரிக்கும் ஆதரவு தரும் பாராளுமன்ற வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என விவசாயிகள் கோரிக்கை முழக்கம் செய்தனர் மேலும் கரும்பு டன்னுக்கு ரூபாய் 5000 வழங்க வலியுறுத்தி எரி சாராயம் தயாரிக்கும் செயல்முறை விளக்கம் செய்து விவசாயிகள் கோஷமிட்டனர்.
எரி சாராயம் ஒரு பங்கு தண்ணீர் நாலு பங்கு இணைக்க 5 லிட்டர் குடி சாராயம் பெறலாம் இத்துடன் ஜிஎஸ்டி இணைத்து 200 மில்லி குடி சாராயம் 20 ரூபாய்க்கு தரமான மலிவு விலையில் மது வழங்கலாம் ஆனால் ஒரு லிட்டர் 46 ரூபாய் பெருமான உள்ள எரி சாராயத்தை 160 ரூபாய்க்கு 250 மில்லி வழங்கி லாபம் தனியார் எரி சாராய ஆலைகள் லாபம் ஈட்டுகிறது என தெரிவித்தனர்.