நாமக்கல்லில் 1 டன் குட்கா பறிமுதல்

நாமக்கல்லில் 1 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-11-24 11:01 GMT
நாமக்கல்லில் 1 டன் குட்கா பறிமுதல்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 நாமக்கல் அரசு வடக்கு மேல்நிலைப் பள்ளி அருகே நாமக்கல் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி சரக்கு லாரி மற்றும் கார் ஒன்றினையும் நிறுத்தி சோதனை செய்ததில் சாம்பிராணி பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

பெட்டியை திறந்து பார்த்த போது அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து லாரி ஓட்டுனர் உட்பட 4 பேரை போலீசார் நாமக்கல் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சோமன்‌, ஏசய்யா, அருள்ரவி, மற்றும் செல்வலிங்கம் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் நால்வரும் பெங்களூரில் இருந்து மினி சரக்கு லாரி மூலம் சுமார் 1050 கிலோ எடைகொண்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக திருநெல்வேலிக்கு கொண்டு‌ செல்வது தெரியவந்தது.

இதனையடுத்து சுமார் 8 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த நாமக்கல் போலீசார் நால்வரையும் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி சரக்கு லாரி மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News