ராசிபுரம் அருகே உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுச் சென்ற பணம் பறிமுதல்

ராசிபுரம் அருகே, உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுச் சென்ற, ரூ.2.80 லட்சம் பணம் பறிமுதல்.

Update: 2024-03-24 07:19 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெற்றி விகாஸ் பள்ளி அருகே, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  அப்போது, தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இருந்து, நாமக்கல் மாவட்டம் பெருமாள்கோவில்மேடு பகுதிக்கு சென்ற முட்டை ஏற்றி வரும்  வாகனத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஆனந்த் தலைமையிலான காவல் துறையைச் சேர்ந்த சந்திரசேகரன், கவிதா  குழுவினர் சோதனை செய்தனர். அப்போது, உரிய ஆவணம் இல்லாத ரூ.1.80 பணத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல், அதே பகுதியில் நடந்த ஆய்வில், கர்நாடகம் மாநிலம் பெங்களூரில் இருந்து கொடைக்கானலுக்கு பட்டாணி வாங்கி வியாபாரம் செய்ய சென்ற வாகனத்தை சஞ்ஜீவன் தலைமையிலான  தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காவல் துறையினர் கார்த்திகேயன், பாலசுப்பிரமணியம் ஆகியோர் சோதனை செய்தனர். அப்போது, உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுச் சென்ற ரூ.1 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் வாகனம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு, ராசிபுரம் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.
Tags:    

Similar News