கேரள கழிவு வாகனம் பறிமுதல்

அருமனை அருகே பனச்சமூட்டில் கேரளாவில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த மினி டெம்போவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-02-06 03:39 GMT
பறிமுதல் செய்த கழிவு வாகனம்
குமரி மாவட்டம் அருமனை  அருகே பனச்சமூடு பகுதியில் தனிப்பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மினி  டெம்போவை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.        அதில் பிளாஸ்டின் டிரம் காணப்பட்டது. விசாரித்த போது,  பன்றி பண்ணை ஒன்றில் இருந்து மலைப் பகுதிக்கு  உணவு கழிகளை எடுத்துச் செல்வதாக கூறினர். ஆனால் சந்தைமடைந்த போலீசார் டெம்போ மேல் பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ட்ரம் களை  அகற்றி பார்த்தபோது, மூடை மூடியாக பிளாஸ்டிக் கழிவுகள் கட்டி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.இதையடுத்து வாகனத்தை போலீசார்  பறிமுதல் செய்தனர். மேலும் சஜி (27),  வினிஷ் (18) மற்றும் அஜித் (31) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.  கேரளா பகுதியில் இருந்து தினமும் பல வாகனங்களில் இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வருவதாகவும்,  இதற்கு சில உயர் அதிகாரிகளும் உடந்தையாக  இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Tags:    

Similar News