மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்!
காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுப்பட்டனர்;
Update: 2023-12-04 01:27 GMT
மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அரசு அனுமதி இன்றி கிரவல் மண் அள்ளிய ஜேசிபி மற்றும் டிப்பரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அரசு அனுமதி இன்றி டிப்பர், ஜேசிபி மூலம் கிரவல் மண் ஆள்வதாக தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் கண்ணன் ,சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் ,தலைமை காவலர் சின்னத்துரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசார் வருவதைப் பார்த்த இரண்டு பேர் வாகனத்தை விட்டு விட்டு தப்பினர். போலீசார் வாகனங்களை கைப்பற்றி பொன்னமராவதி போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.