அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்!

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்து 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

Update: 2024-04-13 11:13 GMT

டிராக்டர் 

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்து 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இலுப்பூர் சுற்றுப் பகுதிகளில் அனுமதியின்றி ஆற்று மணல் மற்றும் கிராவல் மணல் அள்ளப்படுவதாக இலுப்பூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், இலுப்பூர்காவல் நிலைய ஆய்வாளர் தயாளன் தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, இலுப்பூர் அருகே உள்ள பையூர் பேருந்து நிறுத்தம் அருகே மணல் அள்ளி வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ஒரு யூனிட் மணல் அனுமதியின்றி அள்ளி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும், இதில் ஈடுபட்ட கரந்தபட்டியைச் சேர்ந்த ரமேஷ், டிராக்டர் ஓட்டுநர் சபரி ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News