வந்தவாசி அருகே அனுமதியின்றி இயங்கிய பள்ளி வேன் பறிமுதல்
வந்தவாசி அருகே அனுமதி இன்றி இயங்கிய பள்ளி வேன் பறிமுதல் ரூ.52 ஆயிரம் அபராதம் விதிப்பு, மோட்டார் வாகன ஆய்வாளர் நடவடிக்கை
செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி தலைமையிலான ஊழியர்கள் நேற்று வந்தவாசி அடுத்த மேல்மா கூட்டுச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது குறும்பூர் கிராமத்திலிருந்து மேல்மா கூட்டுசாலைக்கு நோக்கி வந்த ஒரு பள்ளி வேனை மோட்டார் வாகன ஆய்வாளர் சோதனை செய்ததில் இன்சூரன்ஸ் மற்றும் வாகன தகுதி சான்று உள்ளிட்ட எந்த ஆவணமும் இன்றி இயங்கியது தெரியவந்தது/ அந்த வாகனத்தினை ஊழியர்களை கொண்டு காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகரிலுள்ள தனியார் பள்ளியில் 16 மாணவர்களையும்இறக்கிவிட்டு பின்னர் அந்த வாகனத்தினை செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து வந்தவாசி மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆய்வாளர் அப்போது வாகன தகுதி சான்றிதழ் இல்லாத 2 லோடு ஆட்டோக்கள் ஒரு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தார். மேற்கண்ட வாகனங்கள் அனைத்திற்கும் ரூ.52 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.