புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
ஐந்து நாட்களாக நடைபெற்ற சோதனையில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன
Update: 2023-12-08 02:19 GMT
திண்டுக்கல் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் காவல்துறையினருடன் இணைந்து கடைகளில் சோதனை நடைபெற்றது. கடந்த 5 நாட்களாக நடைபெற்ற இந்த சோதனையின் போது 120 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டதை அடுத்து 450 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 55 கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.