வந்தவாசி அருகே ஆவணம் இன்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்
வந்தவாசி அருகே ரூ.1½ லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-26 12:42 GMT
பறிமுதல் செய்யப்பட்ட பணம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சு.காட்டேரி கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த ரவீந்திர ரெட்டி என்பதும், புதுச்சேரியில் புதிய கார் வாங்குவதற்காக பணத்தை கட்டிவிட்டு மீதமுள்ள ரூ.1½ லட்சத்துடன் வந்தவாசி வழியாக சித்தூர் பகுதிக்கு சென்றது விசாரணையில் தெரியவந்தது.
உரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.