அனுமதி இன்றி கொண்டுவரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்

சாத்தூர் அருகே தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் அனுமதி இன்றி கொண்டுவரப்பட்ட 48 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2024-03-23 13:36 GMT
சாத்தூர் அருகே தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் அனுமதி இன்றி கொண்டுவரப்பட்ட 48 மது பாட்டில்கள் பறிமுதல் .....*

விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் ஏழு தேர்தல் பறக்கும் படை ஆய்வு குழுவினர் வாகனத் தணிக்கையில் இரவும் பகலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள உப்பு பட்டி விளக்கு பகுதியில் எதிர்கோட்டை ஆலங்குளம் சாலையில் வெம்பக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர் ராஜமோகன் தலைமையில் கிருஷ்ணசாமி சார்பு ஆய்வாளர் தலைமையில் ஆன தேர்தல் பறக்கும் படை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

Advertisement

அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி வாகனத்தை சோதனை செய்த போது அவர் வைத்திருந்த சாக்குப் பையில் அரசு முத்திரை பதித்த மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்ததை அடுத்து அனுமதி இன்றி மது பாட்டில்கள் கொண்டு வந்ததன் காரணமாக பையில் இருந்த 48 மது பாட்டில்கள் மற்றும் அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் ஒப்படைத்தனர். காவல் நிலையத்தில் நடத்திய விசாரணையில் மது பாட்டில்களை கொண்டு வந்தவர், வெம்பக்கோட்டை அருகில் உள்ள கண்டியாபுரம் இலங்கை அகதிகள் முகமை சேர்ந்த பொன்னுத்துரை என்பவரது மகன் பத்மநாபன் (64) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து பத்மநாபன் மீது வழக்கு பதிவு செய்து ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News