மாவட்ட கிரிக்கட் அணி வீரர்கள் தேர்வு
கள்ளக்குறிச்சியில் மாவட்ட கிரிக்கட் அணி வீரர்கள் தேர்வு.;
Update: 2024-04-05 05:09 GMT
கிரிக்கட்
கள்ளக்குறிச்சி, இந்திலி, டாக்டர்.ஆர்.கே.எஸ்.கல்லூரி மைதானத்தில் வரும் 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு 19 வயதுகுட்பட்டவருக்கான மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு நடக்கிறது. இதில் சேர விருப்பமுள்ளவர்கள் 1.9.2005 அன்றோ அதன் பிறகோ பிறந்திருக்க வேண்டும். பங்குபெறும் அனைத்து வீரர்களும் ஆதார் கார்டு மற்றும் பிறப்புச் சான்றிதழ் நகல் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் வீரர்கள் வெள்ளை சீருடை மற்றும் கிரிக்கெட் உபகரணங்களுடன் வரவேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 8300051907 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.