சுய உதவிக்குழு பெண்களுக்கான பயிற்சி முகாம் எம்.பி துவக்கினார்.

குமரி தொகுதி எம்பி விஜய் வசந்த் கலந்து கொண்டார்

Update: 2023-12-02 00:51 GMT
பயிற்சி முகாமை துவக்கிய எம்.பி விஜய வசந்த்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கன்னியாகுமரி மாவட்டம்,நபார்டு வங்கியின் சார்பில்  குறு நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்,  சுய உதவி குழு பெண்களுக்கான உணவு பதப்படுத்துதல் பயிற்சியின் துவக்க விழா நிகழ்ச்சி  மார்த்தாண்டம் சி. டி. இ பயிற்சி கூடத்தில் நடைபெற்றது.   இந்த பயிற்சி முகாமில் குமரி பாராளுமன்ற உறுப்பினர், விஜய்வசந்த் கலந்து கொண்டு  சிறப்புரையாற்றி, துவக்கி வைத்தார்.   இந்திய ரிசர்வ் வங்கியின் முதன்மை மாவட்ட அதிகாரி ராதாகிருஷ்ணன் பயிற்சி பற்றி விளக்கவுரையாற்றினார்.இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி நபார்டு வங்கி துணை பொது மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்,  தா.ஆதிலிங்கபெருமாள்  மற்றும்  சுய உதவிகுழு பெண்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.
Tags:    

Similar News