கள்ளச்சாராயம் விற்பனை: குண்டர் சட்டத்தில் சிறை
குடவாசலில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.;
Update: 2023-12-11 13:26 GMT
பைல் படம்
குடவாசல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்த நன்னிலம், வீதி விடுங்கன், பெரும்படடுகை வ. ஊ .சி. தெருவை சேர்ந்த வீரபத்திரன் என்பவரின் மகன் கேசவன் என்பவன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எஸ்பி பரிந்துரையின் பேரில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.