புனித அல்போன்சா கல்லூரியில் கருத்தரங்கம்
கன்னியாகுமரி மாவட்டம்,கருங்கல்லில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்களில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி அறிவியல் துறை சார்பாக 'டாப் ஐடி ஸ்கில்ஸ் 2024'' என்னும் பொருண்மையில் கருத்தரங்கம் நடைபெற்றது. கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் சனல் வரவேற்புரையாற்றினார். கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் பேரருட்பணியாளர் ஆன்றனி ஜோஸ் கருத்தரங்கினைத் துவக்கி பேசினார்.
கல்லூரி முதல்வர் அருட்பணி முனைவர் மைக்கேல் ஆரோக்கியசாமி தலைமையுரையாற்றினார்.கல்லூரி வளாக ஆன்மீக வழிகாட்டி அருட்தந்தை அஜின் ஜோஸ், துணை முதல்வர் முனைவர் ஆர் சிவனேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நாகர்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரி கணினி அறிவியல் துறை பேராசிரியை முனைவர் ஒய். ஏஞ்சல் ப்ளஸ்ஸி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் .
தனது உரையில் அவர் "தற்போதைய சூழலில் கணினி அறிவியல் துறை மாணவர்களின் தேவை, முக்கியத்துவம் , அவர்களுக்கான பணி வாய்ப்புகள் போன்றவை குறித்துப் பேசியதோடு அப்பணி வாய்ப்புகளைப் பெற மாணவர்கள் எவ்வாறு தங்களைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பேசினார். இறுதியில் மாணவ மாணவிகளின் ஐயங்களுக்குப் பதிலளித்தார்.