திருப்பத்தூரில் கருத்தரங்கம்: துணை சபாநாயகர் பங்கேற்பு....!
திருப்பத்தூரில் சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் துணை சபாநாயகர் பங்கேற்றார்.
திருப்பத்தூர் தூயநெஞ்சக்கல்லூரி மற்றும் மீனாட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கலைஞர் குறித்து கருத்தரங்கில் பல்வேறு கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டு கலைஞரின் நூற்றாண்டு விழாவை போற்றும் விதமாக கருத்தரங்கம் நடைப்பெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துக்கொண்டு பேசியபோது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அனைத்து தேர்தலிலும் தோற்காத தலைவர் கலைஞர் எதிர்கட்சியை சேர்ந்தவர்களுக்கும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றியவர் கலைஞர்.
உயர்கல்வியை அனைவருக்கும் வழங்கியவர் இந்தியா அளவில் உயர்கல்வியில் தமிழ்நாடு 55 சதவீதம் பெற்று முதலிடத்தில் இருப்பதற்கு காரணம் பேருந்துகளை தேசிய உடைமை ஆக்கியவர் நில உரிமை சட்டத்தை கொண்டு வந்தவர். மொழிக்காக போராடி சிறை சென்றவர் பேச்சாற்றல் மிக்கவராக திகழ்ந்தவர் தான் கலைஞர் என புகழாரம் சூட்டினார். நில உரிமை சட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர் தான். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர்.
அதன் பிறகு இந்திய அளவில் இந்த சட்டத்தை கொண்டு வரப்பட்டது என கூறினர். இதனை தொடர்ந்து வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.