அரவைக்காக 1000 டன் நெல் மூட்டைகள் தென்காசிக்கு அனுப்பி வைப்பு
Update: 2023-11-01 09:02 GMT
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரம் டன் எடை கொண்ட பொது ரக நெல் மூட்டைகள் 78 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரயிலில் 26 பெட்டிகளில் ஏற்றினர்.இதனை தொடர்ந்து அரவைக்காகத் தென்காசிக்கு ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது