துணிப்பை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
திருப்பத்தூரில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராகத் துணிப்பைகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராகத் துணிப்பைகளைப் பயன்படுத்திட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்!
திருப்பத்தூர் மாவட்டம் தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராகத் துணிப்பைகளைப் பயன்படுத்திட பொதுமக்களுக்கு விழிப்புணர்வை திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியும் காக்கண்ணாம்பாளையம் இயற்கை மீட்பு அறக்கட்டளையும் இணைந்து "நெகிழியற்ற திருப்பத்தூர் வளமான திருப்பத்தூர்" என்ற முழக்கத்தோடு பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராகத் துணிப்பைகளைப் பயன்படுத்திட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது இதில் மாவட்டம் ஆட்சியர் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் நெகிழிப்பை பயன்படுத்த மாட்டோம்" என்கிற உறுதி மொழியை மாணவர்களும் பொதுமக்களும் எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர் அன்புச்செல்வன் மற்றும் கல்லூரியின் முதல்வர் அருட்திரு முனைவர் மரிய ஆண்டனிராஜ் அவர்கள் வழங்கினார்கள். தொடர்ந்து மாணவர்களுக்கு துணிப்பை விநியோகிக்கும் அரங்கத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்து திருப்பத்தூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உரையாற்றி பொதுமக்களுக்கு துணிப் பைகளை வழங்கினார். இந்நிகழ்வில் இயற்கை மீட்பு அறக்கட்டளையை பொறுப்பாளர் இள. நாராயணன் நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்வில் 1000 பொதுமக்களுக்கு விலையில்லா துணிப் பைகளை வழங்கி நெகிழியைக் கைவிட்டு துணிப் பைகளுக்குத் திரும்புமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது