அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் பணி ஓய்வு பெற்ற தலைமையாசிரியை ஜெயந்தி, அவரது கல்விச் சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்;

Update: 2024-03-21 05:32 GMT

பாராட்டு விழா

விராலிமலை அரசுப பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியைக்கு பணி நிறைவு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். முன்னாள் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் அய்யப்பன் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் புவனேஸ்வரி வரவேற்றார். விழாவில், பணி ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ஜெயந்தி அவரது கல்விச் சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

Advertisement

இவரது பணிக்காலத்தில் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் இப்பள்ளி முதலிடம் பிடித்தது. விழாவில், விவேகா பள்ளித் தாளாளர் வெல்கம் மோகன், ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை ஆசிரியர் சிதம்பரம், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஜனனி ராமச்சந்திரன், மெடிக்கல் குமார், துரைராஜ், தீபன் சக்கரவர்த்தி, கவுதமன் உள்ளிட்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக உதவி தலைமை ஆசிரியர் தேவகி வாழ்த்துரை வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியர் சரஸ்வதி, அலுவலக உதவியாளர் கௌரி செய்திருந்தனர். ஆசிரியர் ரெஜினா நன்றி கூறினார்.

Tags:    

Similar News