சேரன்மகாதேவி முன்னாள் எம்எல்ஏ மரணம்
சேரன்மகாதேவி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேல்துரை இன்று காலமானார். அவரின் உடலுக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.;
Update: 2023-10-24 07:04 GMT
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேல்துரை
சேரன்மகாதேவி சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேல்துரை இன்று காலமானார். வேல்துரைக்கு தற்போது அவருக்கு வயது 73.கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். உயிரிழந்த முன்னாள் எம்எல்ஏவின் உடன் அவரது சொந்த ஊரான சேரன்மகாதேவி அடுத்த கங்கனாங்குளம் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளது.நாளை மதியம் 3 மணிக்கு இறுதி சடங்குகள் சேரன்மாதேவி அடுத்த கங்கனான்குளம் கிராமத்தில் நடைபெறுகிறது 1996 மற்றும் 2006ம் ஆண்டு சேரன்மகாதேவி சட்டமன்ற தொகுதியில் இருந்து உறுப்பினராக வேல் துரை தேர்ந்தெடுக்கப்பட்டார்.