சேது பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்
சேது பொறியியல் கல்லூரியில் 1995 ஆம் ஆண்டு படித்த முதல் தொகுதி முன்னாள் மாணவர்கள் கூட்டம் நடைபெற்றது.
மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் முதல் பேட்ச் படித்த மாணவர்களின் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் 1995 ஆம் ஆண்டு இயந்திரவியல், கணினி கருவியல் மற்றும் கட்டுப்பாட்டு துறை மாணவர்கள் 25 ஆண்டுக்கு பின் சந்தித்தனர். கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் எஸ். முகமது ஜலீல் அவர்கள் தலைமை தாங்கினார். நிறுவனர் பேசுகையில் இக்கல்லூரி 1995 ஆம் ஆண்டு மூன்று துறைகளில் இயந்திரவியல் கணினி கருவியல் மற்றும் கட்டுப்பாட்டு துறை என 180 மாணவர்களுடன் துவங்கப்பட்டது.
தற்போது பதினாறு துறைகளும் 4500 மாணவர்களும் படித்து வருகின்றனர் உலக தரச் சான்றிதழ் தன்னாட்சி சான்றிதழ் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மற்றும் உலக அளவில் பல்கலைக்கழக ஒப்பந்தம் ஆராய்ச்சி புதிய கண்டுபிடிப்புகள் என கல்லூரி எல்லா துறைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்று பேசினார். நிர்வாக அதிகாரி எஸ் .எம். சீனி முகைதீன் இணை முதன்மை நிர்வாக அதிகாரி எஸ். எம் .சீனி முகமது அலி யார் முன்னிலை வகுத்தனர். கல்லூரி நிர்வாக இயக்குனர் எஸ். எம் .நிலோஃபர் பாத்திமா கல்லூரி ஆராய்ச்சி இயக்குனர் எஸ் .எம். நாசியா பாத்திமா முதல்வர் சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னாள் மாணவர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் கணினி துறை தலைவி பார்வதி வரவேற்புரை வழங்கினார்.
பொருளாளர் பேராசிரியர் தீபா நன்றி உரை வழங்கினார். நிகழ்வில் மாணவர்கள் மாணவிகள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்களது கல்லூரியில் பெற்ற அனுபவத்தை ஆசிரியர்களின் ஆற்றல்களையும் விளக்கினர். நிகழ்வில் கல்லூரி அகடமிக் டீன் ஷாநவாஸ் தேர்வுத்துறை தலைவர் பேராசிரியர் முரளி கண்ணன் டீன் சிவரஞ்சனி துறை த்தலைவர்கள் மக்கள் தொடர்பு அதிகாரி லட்சுமண ராஜ் கலந்து கொண்டனர். நிகழ்வை முன்னாள் சங்க மாணவ கூட்டமைப்பின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
படத்தில் சேது பொறியியல் கல்லூரி 1995 ஆம் ஆண்டு படித்த முதல் தொகுதி முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் கல்லூரி தலைவர் மற்றும் நிறுவனர் எஸ். முகமது ஜலில் முதன்மை நிர்வாக அதிகாரி எஸ் .எம். சீனி முஹைதீன் இணை நிர்வாக அதிகாரி எஸ் .எம். சீனி முகமது அலி யார் முதல்வர் சிவக்குமார் டீன் ஷாநவாஸ் தேர்வுத்துறை தலைவர் முரளி கண்ணன் முன்னாள் சங்க கூட்டமைப்பின் செயலாளர் கணினி துறை தலைவி பார்வதி மற்றும் மாணவ, மாணவிகள்.