குமரியில் நாளை 7 இடங்களில் நீட் தேர்வு மையம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏழு இடங்களில் நீட் நுழைவு தேர்வு நடைப்பெற உள்ளது.;
நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டுக்கான நீட் இளங்கலை தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 9-ம் தேதி தொடங்கி மார்ச் 16-ல் முடிந்தது. நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆற்றூர் என்.வி.கே எஸ் மேல்நிலைப்பள்ளி, ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரி, நாகர்கோவில் வின்ஸ் பொறியல் கல்லூரி, ஒழுகினசேரி ராஜாஸ் இன்டர்நேஷனல் கல்லூரி, ஆரல்வாய்மொழி லயோலா பொறியியல் கல்லூரி, பால் குளம் ரோகினி பொறியியல் கல்லூரி, ஆகிய ஏழு கல்வி நிறுவனங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் மொத்தம் 5196 மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு நேரமானது மதியம் 2 மணியிலிருந்து மாலை 5:20 மணி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.