உசிலம்பட்டி அருகே கஞ்சா கடத்திய ஏழு பேர் கைது

உசிலம்பட்டி அருகே கீரிபட்டியில் கஞ்சா கடத்திய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-02-18 16:22 GMT

காவல் நிலையம் 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிப்பட்டி பகுதிகளில் கஞ்சா கடத்தி வருவதாக தனிப்பிரிவு போலீசாருக்கும் உசிலம்பட்டி தாலுகா போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தனி பிரிவு போலீசாரும் காவல்துறையிரனும் ஒன்றிணைந்து கீரிப்பட்டி கம்மாக்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்தவர்களை பிடித்து விசாரணை செய்த போது கீரிப்பட்டியைச் சேர்ந்த வனச்சாமி மகன் தீபக்(19) வெள்ளமலை பட்டியைச் சேர்ந்த தவபாண்டி(23) நக்கலபெட்டியைச் சேர்ந்த பால்பாண்டி மகன் அஜய(22); சுரைக்காய்பட்டியைச் சேர்ந்த கண்ணன் மகன் பிரபாகரன்(21) பூச்சிபட்டியைச் சேர்ந்த இளையராஜா மகன் மகாராஜன்(32) சேர்வைபட்டியை சேர்ந்த ஆண்டிமகன் முருகன்(29) குன்னத்துப்பட்டி சேர்ந்த இருளப்பன் மகன் கருப்பசாமி(28) ஆகியோர் கஞ்சா கடத்தி வருவது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து ஏழு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த இரண்டு கிலோ கஞ்சாவை பருமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News