வாறுகால் இல்லாத இடங்களில் வாகனம் மூலம் கழிவுநீர் அகற்றம்
Update: 2023-11-20 08:30 GMT
கழிவுநீர் அகற்றம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி 25 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட திருவிக நகர் புது தெருவில் வாறுகால் இல்லாத பகுதிகளில் கழிவுநீர் தேங்கியது. இதுகுறித்து அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் முப்புடாதி காவல்கிளி சங்கரன்கோவில் நகராட்சி கழிவுநீர் அகற்றும் வாகனத்திற்கு தகவல் தெரிவித்தார். அப்பகுதிக்கு வந்த நகராட்சி ஊழியர்கள் உடனடியாக கழிவு நீரை அகற்றினர்.