பாலியல் குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

பெரம்பலூர் மாவட்டத்தில் பாலியல் குற்ற வழக்கில் ஈடுபட்ட நபர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது.

Update: 2024-03-07 01:55 GMT

காவல் நிலையம் 

பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொளத்தூர் கீழத்தெரு பகுதி சேர்ந்த மருதை (35) என்பவரின் மீது கொடுத்த புகாரின் பேரில் மருதை மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த போக்சோ வழக்கின் குற்றவாளியான மருதையை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் கற்பகம்  குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.குற்றவாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் காவல்துறையினரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி வெகுவாக பாராட்டினார். 

Tags:    

Similar News