குதிரையேற்ற பயிற்சிக்கு வந்த மாணவியிடம் சில்மிஷம் : இருவர் கைது

பட்டுக்கோட்டையில் குதிரையேற்ற பயிற்சிக்கு வந்த மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த பயிற்சி மைய நிர்வாகிகள் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2024-06-19 03:50 GMT

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளை பைபாஸ் சாலையில் குதிரை ஓட்டும் பயிற்சி மையம் நடத்திவருபவர் பட்டுக்கோட்டை முடிபூண்டார் நகரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ராஜ்குமார் (வயது41), அவருடன் இணைந்து பங்குதாரராகவும் அந்த பயிற்சி மையத்தில் பயிற்சியாளராகவும் நாட்டுச்சாலை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் தமிழரசன் (வயது26), இருக்கிறார்.

இங்கு காலை மற்றும் மாலை நேரத்தில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பலரும் குதிரை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வரும் மாணவ மாணவிகளுக்கு தமிழரசன் என்பவர் குதிரை ஓட்ட பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்நிலையில் பட்டுக்கோட்டையை சேர்ந்தவரின் மகளுக்கு தமிழரசன் குதிரை ஏறும் பயிற்சியினை கற்றுக் கொடுத்து வந்துள்ளார். பின் அந்த சிறுமியிடம் பாலியல் ரீதியான துன்புறுத்துக்களையும் செய்துள்ளார். அதனை பொறுக்க முடியாத அந்த சிறுமி தந்தையிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். குதிரை பயிற்சி சொல்லி கொடுக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜ்குமாரிடம் மாணவியின் தந்தை நடந்தவற்றை கூறியுள்ளார்,

ஆனால் அதை கண்டு கொள்ளாமல் மாணவியின் தந்தையிடம்  ராஜ்குமார் மற்றும் தமிழரசன் இருவரும் பணம் பறிப்பதற்காக பேரம் பேசி உள்ளனர். இது கடந்த ஒரு ஆண்டு காலமாக நடந்து வந்துள்ளது. இதனை வெளியில் சொல்லும் பட்சத்தில் தனது மகளின் எதிர்காலமும் தனது பெயரும் கெடும் என பயந்த அவர் ஒரு நிலைக்கு மேல், இருவரின் தொந்தரவு தாங்க முடியாமல் கடந்த 15.6.24 ம் தேதி தேதி பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வனிதா விசாரணை செய்து விசாரணை முடிவில் வழக்கில், குற்றவாளிகளான ராஜ்குமார் (வயது41), தமிழரசன் (வயது26), ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tags:    

Similar News