சிறுமிக்கு பாலியல் தொந்தரவு -முதியவருக்கு ஆயுள் தண்டனை.

கரூரில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.;

Update: 2024-01-03 08:23 GMT

மேகநாதன்

கரூர் மாவட்டம், திருமாநிலையூர் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி மகன் மேகநாதன் 63. இவர், அருகில் உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், அது தொடர்பாக சிறுமியின் தாயார் கடந்த 2022 ஜூன் 21 ஆம் தேதி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், மேகநாதன் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர் கரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர். இது தொடர்பான வழக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மேகநாதனுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 2000 அபராதம் விதித்தும், அபராதம் கட்ட தவறினால், மேலும் 18 மாதம் மெய்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Advertisement

இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த கரூர் நகர அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், சாட்சிகளை முறையாக ஆஜர் செய்த நீதிமன்ற காவலர்கள் ஆகியோரை, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் பாராட்டினார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News