சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவருக்கு 20 வருட சிறை தண்டனை
திண்டுக்கல் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;
Update: 2024-01-04 02:56 GMT
தணடனை விதிக்கப்பட்டவர்
திண்டுக்கல் சின்னாளபட்டி பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சின்னாளப்பட்டியைச் சேர்ந்த கேசவன் (71) என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.2000 அபராதமும் விதிக்கப்பட்டது. மற்றொரு குற்றவாளியான பாபு என்பவருக்கு நான்காண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூபாய் ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கோர்ட் தீர்ப்பை கேட்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.